சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலியின் 244 ஆவது நினைவு தினம் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அஞ்சலி
Oct 12, 2024
431
சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலியின் 244 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள நினைவிடத்தில் அவரது உருவச் சிலைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒருங்கிணைந்த கல்விக் கொள்கை குறித்த மத்திய அரசின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிய பிறகு பள்ளிக் கல்வித்துறைக்கான நிலுவைத்தொகை விடுவிக்கப்படும் என்றார்.
சென்னை விமான சாகச நிகழ்ச்சிக்கு முறையான ஏற்பாடு இல்லை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு
Oct 07, 2024
437
விமான சாகச நிகழ்ச்சியில் சமாளிக்க முடியாத கூட்டத்தை தவிர்த்து இருக்கலாம் என்ற உண்மையை கனிமொழியே எக்ஸ் தளம் மூலம் தெரிவித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிகழ்ச்சிக்கு முன்பு விமானப்படை அதிகாரிகள் தமிழக அரசிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதற்கேற்றார் போல் முறையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது என்றார்.
கூவத்தை சீரமைக்க 'மாஸ்டர் பிளான்' வேண்டும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
Sep 23, 2024
463
குஜராத்தில் பிரதமர் மோடியால் சீரமைக்கப்பட்ட சபர்மதி ஆற்றை பார்த்துவிட்டு வந்து கூவத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர் கூவம் ஆற்றை சீரமைக்க செலவு செய்ததாக கூறப்படும் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி கூவத்திலேயே கரைந்து போனதாக தெரிவித்தார்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வழிபாடு
May 25, 2024
304
திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கோயிலில் உள்ள ஒவ்வொரு சன்னதிக்கும் சென்று வழிபட்டார். கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட பிறகு, கொடி மரம் முன்பாக அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
25 கோடி ஏழை மக்களின் வாழ்க்கையை பிரதமர் மோடி நடுத்தரத்திற்கு உயர்த்தியதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு
Apr 01, 2024
288
நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்றைய பிரச்சாரத்தை துவக்கினார். பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால சிறந்த நிர்வாகத்தின் மூலம் ஏழைகளாக இருந்த 25 கோடி மக்களின் வாழ்க்கையை நடுத்தரத்திற்கு உயர்த்தியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர் குறித்த ஆ.ராசாவின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது : மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
Feb 05, 2024
475
தமிழ்நாட்டு மக்களால் தெய்வமாகப் போற்றப்படும் எம்.ஜி.ஆரை திமுக எம்.பி ஆ.ராசா இழிவாகப் பேசியது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்கூறினார். உதகையிலுள்ள முகாம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆ.ராசா தனது பேச்சால் மக்களுக்குப் பயந்து தொகுதி மாறலாம் அல்லது தேர்தலில் போட்டியிடாமலே கூட போகலாம் என்றார்.

87 வயது நாட்டுப்புற கலைஞர் பத்திரசாமிக்கு பத்மஸ்ரீ விருது... மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் சென்று வாழ்த்து
Jan 26, 2024
642
ஒயிலாட்டம், வள்ளி கும்மி போன்ற அழிந்துவரும் கலைகளை கிராமப்புற பெண்களுக்கு கற்பித்துவரும் 87 வயது நாட்டுபுற கலைஞர் பத்திரசாமிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் தாசம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்தார்.

கூவத்தில் படகு விடுவோம் என்றவர்கள் சென்னையை கூவமாக மாற்றிவிட்டனர் : மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்
Dec 10, 2023
1014
சென்னையை சிங்காரச் சென்னையாக்கி கூவத்தில் படகு விடுவோம் என்று கூறியவர்கள், தற்போது சென்னையையே கூவமாக மாற்றி விட்டார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.மேட்டுப்பாளையத்தில் தனது முகாம் அலுவலகத்தை திறந்துவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் மழைநீர் வடிகால்களை அமைப்பது தொடர்பாக தி.மு.க.வினர் செய்யாத பணிகளை செய்ததாக கூறி வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் 9 தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு - அமைச்சர் எல்.முருகன்
Apr 02, 2023
2215
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தொகுதிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற பாஜகவின் சக்தி கேந்திரா பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் இக்கருத்தினை தெரிவித்தார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருப்பதியில் சாமி தரிசனம்
Feb 05, 2023
1861
மத்திய அரசின் 2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் 2047ல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருப்பதற்கான துவக்கமாக இருக்கிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.இன்று காலை திருப்பதி கோயிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார்.
ரோஜ்கர் மேளா திட்டம் - 210 பேருக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பணி ஆணைகளை வழங்கினார்..!
Nov 22, 2022
3042
ரோஜ்கர் மேளா எனப்படும் மத்திய அரசின் வேலை வாய்ப்பு விழாவின் ஒருபகுதியாக ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 210 பேருக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பணிநியமன ஆணைகளை வழங்கினார். ரயில்வே துறை, வங்கித்துறை, தபால்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News